உலகம் ஒரு பார்வை என் நண்பர்களுக்காக ...
செளதி அரேபியா- அமெரிக்கா இடையிலான கிட்டத்தட்ட 50 ஆண்டு கால மிக நெருக்கமான உறவில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் செளதி அரேபியாவுக்கு ஒரு தாற்காலிக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடம் தேவையில்லை என்று முகத்தில் அடித்தார்போல சொல்லிவிட்டது செளதி. காரணம், அமெரிக்காவுடன் ஆரம்பித்துள்ள மோதல் தான்.ஐ.நா. சபை என்பது பொதுவான ஒரு அமைப்பாக இருந்தாலும் அதை மறைமுகமாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது என்னவோ அமெரிக்கா தான்.
அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்-செளதி: எங்களுக்கு பாதுகாப்பா சபையில் இடம் வேண்டாம் என்று கூறிவிட்டு செளதி அமைதியாகியிருந்தால் கூட அது பெரிய விஷயம் ஆகியிருக்காது. ஆனால், இதன் பிறகு ஒரு சம்பவம் நடந்தது.சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை சந்தித்த செளதி அரேபிய உளவுப் பிரிவின் தலைவரான பந்தர் பின் சுல்தான் அல்-செளத் ஒரு குண்டைப் போட்டார். ''இனிமேல் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்'' என்று வெளிப்படையாகவே அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் நாங்கள் ஐ.நா. சபை இடம் வேண்டாம் என்று சொன்னது கூட அமெரிக்காவுக்கு எதிராகத் தான் என்றார்.
என்ன ஆச்சு?: இந்த இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஆரம்பித்ததற்குக் காரணம் பெட்ரோலியம் என்றால் இப்போது வேண்டா வெறுப்பாக உறவு தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் தீவிரவாதம் தான். நெடு நாள் நட்பு ஏன் வேண்டா வெறுப்பான நட்பான மாறியது...?. இதோ அதற்கான சில காரணங்கள்...
அரபு வசந்தம்: இந்த அரபு வசந்தம் டுனீசியாவில் ஆரம்பித்து, மொரீஷியானா, எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன் என்று பரவி செளதியின் அண்டை நாடுகளான பஹ்ரைன், ஏமன் வரைக்கும் எட்டிப் பார்த்துவிட்டது. இதில் சில நாடுகளில் சர்வாதிகாரிகளாக இருந்த ஆட்சியாளர்கள் பதவிகளை இழக்க, சில நாடுகளில் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சிரியாவில் ரஷ்ய உதவியுடன் இந்த புரட்சியை அடக்கி ஒடுக்க முயன்று வருகிறார் அதிபர் அல் ஆசாத்.இந்த அரபு வசந்தத்தின் பின்னணியில் இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதில் சில நாடுகளில் நடக்கும் போராட்டத்துக்கு செளதி ஆதரவையும் சில நாடுகளில் மக்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
ஷியா அரசுகளுக்கு எதிராக ஆதரவு: அதாவது செளதி அரேபியாவின் நிலைப்பாடு என்னவென்றால், எங்கெல்லாம் ஷியா பிரிவு ஆட்சியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி மூலம் சன்னி பிரிவினர் பலம் பெறுவதாக இருந்தால் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு. இது தான் சிரியாவில் செளதியின் நிலைப்பாடு.அங்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அல் ஆசாதை ஒடுக்க அமெரிக்காவை ஆதரிக்கிறது. ஆனால், இதே அரபு வசந்தம் பஹ்ரைனுக்கு வந்தபோது அதை ஒடுக்க அந்நாட்டு அதிபருக்கு செளதியே உதவியது. காரணம், அங்கு ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசித்தாலும் ஆட்சியில் இருப்பது சன்னி பிரிவினர். ஆனால், பஹ்ரைனில் புரட்சியை ஒடுக்க செளதி களமிறங்கியபோது, புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவ முயன்றது. இது இரு நாடுகளிடையே மோதலை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
எகிப்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல்: இந் நிலையில் எகிப்தில் மக்கள் புரட்சி நடந்து அங்கு முகம்மத் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரை சில மாதஙகளிலேயே ராணுவ கமாண்டர்கள் புரட்சி செய்து ஆட்சியை விட்டு விரட்டினர். இதை அமெரிக்கா எதிர்க்க, ராணுவ கமாண்டர்களுக்கு செளதி ஆதரவு தந்தது. இதில் தான் செளதி-அமெரிக்கா இடையே முதல் மோதல் ஆரம்பமானது.மோர்சிக்கு அமெரிக்கா ஆதரவாய் நிற்க, அவரை பதவி நீக்கிய ராணுவத் தளபதிகளுக்கு செளதி ஆதரவு தந்தது. இதையடுத்து எகிப்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்துவதாக அறிவிக்க, எவ்வளவு நிதியை அமெரிக்கா நிறுத்துகிறதோ அந்த நிதியை நாங்கள் எகிப்துக்கு தருவோம் என செளதி அறிவித்து, அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளது.
ஈரான் விவகாரம்: 1979ம் ஆண்டு புரட்சி நடந்து ஈரானில் ஆயத்துல்லா தலைமையிலான ஆட்சி வந்ததில் இருந்தே அந் நாட்டை அமெரிக்காவும் செளதி அரேபியாவும் இணைந்து தான் எதிர்த்து வருகின்றன. அணு ஆயுத விவகாரத்தை வைத்து ஈரான் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செளதி எதிர்பார்க்க, அமெரிக்காவோ ஈரானுடன் பேச்சு நடத்தி பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்துவிட்டது. காரணம், இராக், ஆப்கானிஸ்தான் மாதிரியான நாடல்ல ஈரான். அங்கு போரில் இறங்கினால் அமெரிக்காவுக்குத் தான் பெரும் நஷ்டம் விளையும். இராக்கில் பெருவாரியான ஷியாக்களை ஒடுக்கித் தான் ஆட்சியில் இருந்தார் சதாம். அவருக்கு எதிரான அமெரிக்க ராணுவத் தாக்குதல் தொடங்கியதுமே உள்நாட்டில் பெருவாரியாக உள்ள ஷியாக்களும் குர்த் இனத்தினரும் கை கோர்த்து அமெரிக்காவுக்கு ஆதரவு தந்தனர். பெரும்பான்மையான மக்கள் தன்னுடன் இல்லாத நிலையில் சதாமால் நாட்டைக் காக்க முடியவில்லை. ஆப்கானில்தானில் ஒவ்வொரு ஏரியாவும் ஒரு பழங்குடித் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்க, போர் தொடங்கிய ஒரே வாரத்தில் அமெரிக்கா அங்கு கால் பதித்துவிட்டது. ஆனால், ஈரானில் அமெரிக்கா காலை வைத்தால் மொத்த நாடும், மக்களும் எதிராகக் களம் இறங்குவர் என்பதால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசித்து வருகிறது. இதைத் தான் செளதியால் ஏற்க முடியவில்லை. தன்னை வைத்து ஈரானுடன் இத்தனை காலம் பாலிடிக்ஸ் செய்த அமெரிக்கா இப்போது தன்னை ஒதுக்கிவிட்டு அந்நாட்டுடன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க முயல்வதை செளதி ரசிக்கவில்லை.
இராக்: சதாம் ஹூசேன் ஆட்சியில் இருந்தவரை தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவின் துணை செளதிக்குத் தேவைப்பட்டது. ஆனால், இப்போது அங்கு ஷியா பிரிவினர் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், அந்த நாடு ஈரானுடன் நட்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளும் எதிர்காலத்தில் செளதிக்கு பெரும் தலைவலியாய் இருக்கப் போவது நிச்சயம்.(குவைத்தைப் பிடித்துவிட்டு செளதியை நோக்கி முன்னேறிய சதாமின் படைகளை விரட்ட 4 லட்சம் அமெரிக்கப் படைகளை தனது மண்ணில் கால் பதிக்க விட்டது செளதி அரேபியா. இதற்கு செளதி மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது நினைவுகூறத்தக்கது). இராக்கில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த அமெரிக்கா எந்த வகையிலும் உதவவில்லை என்பது செளதியின் கோபம்.
சிரியா: சிரியாவில் அல் ஆசாதை ஆட்சியை விட்டு அகற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கத்தார், துருக்கியுடன் இணைந்து செளதியும் களத்தில் உள்ளது. ஆனால், ரஷ்யாவின் ஆயுத உதவியோடும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரின் உதவியோடும், ஈரானின் முழு ஆசிர்வாதத்தோடும் இதை எதிர்கொண்டு வருகிறார் அல் ஆசாத். தனது மக்கள் மீதே ரசாயான ஆயுதங்களை ஆசாத் பயன்படுத்தினாலும் கூட சிரியா மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்த முன் வரவில்லை. காரணம், ரஷ்யா போடும் முட்டுக்கட்டை மற்றும் எச்சரிக்கை.சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு உலகளவில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டும் ஒரு களமாக சிரியாவை ரஷ்யா எடுத்துக் கொண்டுவிட்டதாதவே தோன்றுகிறது. இந்த நாட்டுக்கு எல்லா வகையான உதவிகளையும் ரஷ்யா செய்து வருகிறது, ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த அத்தனை தீர்மானங்களையும் தனது 'வீட்டோ' அதிகாரம் மூலம் ரத்துவிட்டார் ரஷ்யாவின் விளாடிமீர் புடின். ஆசாதுக்கு எதிராக அல்-கொய்தா ஆதரவு படைகள் களமிறங்கியுள்ளதால், ஆசாதை எதிர்த்துப் போரிடுவது என்பது நம்மை நாமே எதிர்த்துப் போரிடுவதற்கு சமம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கருத ஆரம்பித்துள்ளன. இதனால் சிரியா மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்ற செளதியின் கோரிக்கையை காதில் வாங்க மறுக்கின்றன.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் வாங்கிய அடியில் உடம்பெல்லாம் புண்ணாக இருக்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அந்த நாட்டிலிருந்து அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்குமோ என்று அந்தப் பிராந்தியமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. அங்கு மீண்டும் தலிபான்கள், அல் கொய்தா தலையெடுக்காமல் இருக்க செளதி உளவுப் பிரிவின் உதவி அமெரிக்காவுக்கு நிச்சயமாகத் தேவை. இதனால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மட்டும் செளதி சொல்வதை அமெரிக்கா காது கொடுத்துக் கேட்டு வருகிறது.
கச்சா எண்ணெய்: ஆனால், பிற விவகாரங்களில் தன்னை அமெரிக்கா ஒதுக்க ஆரம்பித்துள்ளதாகவே செளதி கருதுகிறது. அதிலும் இந்த இரு நாடுகளையும் நெருக்கமாக்கிய கச்சா எண்ணெய் தான் இப்போது இரு நாடுகளையும் தூரமாக்கி வருகிறது. செளதி மீதான தனது சார்பு நிலையைக் குறைப்பதற்காக, சமீபகாலமாகவே செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது நாட்டில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்துவிட்ட அமெரிக்கா, பக்கத்தில் உள்ள வெனிசுவேலாவில் இருந்து (அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போட்டுக் கொண்டே...) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இப்போது சீனாவுக்குத் தான் அதிகமான எண்ணெய்யை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இது தான் அமெரிக்கா-செளதி இடையிலான மோதலுக்கு மிக மிக முக்கியக் காரணம்.அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து வெளியே வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துவிடக் கூடாது என்பதும் அமெரிக்காவின் பிரார்த்தனை. காரணம், இந்த விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், செளதியின் பெட்ரோலிய வரத்து குறைந்தால் உலகளவில் விலை கூடும், அமெரிக்கா உள்பட. ஆனால், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செளதி-அமெரிக்கா இடையிலான உறவு அவ்வளவு சீக்கிரத்தில் இறுதிக்கட்டத்தை எல்லாம் அடைந்துவிடாது. சண்டை போட்டுக் கொண்டே இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள். அது எதுவரை என்கிறீர்களா? இந்த உலகத்தில் பெட்ரோலியமும் தீவிரவாதமும் இருக்கும் வரை!